You are currently browsing the monthly archive for ஆகஸ்ட், 2006.

நம் சூர்ய குடும்பத்திலிருந்து புளுட்டோவுக்கு இருந்த ‘கிரகம்’ என்ற அந்தஸ்த்தை நேற்று (24 Aug 2006) பரேகில் நடந்த ஒட்டெடுப்பில் ஒரு மனதாக நீக்கிவிட்டனர். அதனால இனி பாடபுத்தகங்களில் புளுட்டோவை நீக்க வேண்டும். இது ஏன் என்றால் பரவெளியில் உள்ள ஒரு பொருள் கிரகமாக கொள்ள வேண்டுமென்றால் கீழ் உள்ள மூன்று விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்:

1. அது சூரியனை சுற்றி வர வேண்டும்
2. கிட்டதட்ட ஒரு கோள வடிவு பெற்றதாக அதன் அளவு பெரிதாக இருக்க வேண்டும்
3.வேறு எந்த ஒரு கிரக, உப-கிரக பதையிலும் குறுக்கிடாமல் தனிப்பாதையில் பயனிக்க வேண்டும்.

நவீன தொலைநோக்கி மற்றும் செயற்கைகோள் ஆராய்ச்சி மூலம் பின் உள்ள இரண்டு விதிகளுக்கு புளுட்டோ உட்படவில்லை. அதனால் அது இனி இரு கிரமாக கொள்ள முடியாது. அதனால் இது இனி குள்ள-கிரகம் (dwarf planet) என்ற வகையில் சேர்ந்ததுவிட்டனர்.

இனி நமது சூர்ய அமைப்பு இப்படி இருக்கும்.


சீரஸ் புள்ட்டோ, சரான் மற்றும் 2003uB313 என்னும் குள்ளர்களோடு 8 கிரகங்கள்தான்.

அசல் தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.

பிகு: நம்ம இந்திய சோதிட முறைப்படி சூரியனை சேர்த்து ஒன்பதுதான் என்பது மிக வியப்பாக உள்ளது. இவர்கள் இத்தனை ஆண்டுகள ஆராச்சி செய்த பின் திருத்திக்கொண்டுள்ளனர். கிரகம் என்றால் என்ன என்பதில் நம் முன்னோர்கள கொண்ட விதிகள் தகர்க்கப்படாமல் உள்ளது.

என் வீட்டு சமையலறை ஜன்னலுக்கு அருகே இருக்கும் மரத்தில் வந்து அமர்ந்திருந்தது இந்த பட்டாம்பூச்சி நீண்ட நேரம். நான் போய் காமிராவை எடுத்து வருவது தெரிந்ததும் இன்னும் சற்று முன்னுக்கு வந்து போஸ் வேறு கொடுத்தது. மிக நிதானமாக எடுத்த படம்.

சரி வெறுமன படம் போட்டா, பாத்ததும் மனசுல ஓடினது எப்பவோ படிச்ச ஹைகூ :

மலரை பறிக்க போனேன்
பறந்து சென்றது
பட்டாம்பூச்சி

மேலும் இதன் பெயர் மொனார்க் (Monarch). இன்னும் விளாவாரியா சொல்லனும்னா Danaus plexippus, புரிஞ்சுதா?. வாழ்நாள் ஒன்பதே மாதங்கள், முட்டையிலிருந்து இறக்கும் வரை. புழுவாக இருக்கும் போது ஒருவகை milkweed என்னும் இலையை உன்பதால் இதறக்கு விஷத்தன்மை அதிகம்.இந்த விஷமே இதற்கு இத்தனை வண்ணத்தை கொடுக்கிரது. இதை சாப்பிடுபவருக்கு ஆப்பு. அதானால் பாதுகாப்பு. பறவகைள் இதன் கவர்ச்சிகரமான வண்ணத்தை வைத்து ஒதுங்கிப்போய்விடும். வட அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா மற்றும் நியுசியில் காணப்படும். இதுக்கு ஒரு பங்காளியும் உண்டு, அதன் பெயர் வைசிராய் (Viceroy) பாக்க இவரு மாதிரியே இருப்பாப்ல. அவுகளுக்கு ரெக்கேல எஸ்ட்ராவா கோடு இருக்கும்.

சரி பதிவு தலைப்புக்கும் இதுக்கும் என்னா சம்பந்தமனு ஒரே குடச்சலா இருந்தா அது வேர ஒண்ணுமில்ல, இத பாத்துட்டு “மனதோடு மழைக்காலத்துல” காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ப்ளை ஓடுதே (கண்கள் தேடுதே: பாடியவர்கள், சாதனா, ஜெஸ்ஸி) என்ற பாடலை கேட்டா நிச்சயம் ஓடும். வாழ்க கார்த்திக் ராஜா.

தலப்பு சரிதானே?