You are currently browsing the monthly archive for அக்டோபர் 2005.

அந்தா இந்தான்னு ஒரு வழியா நல்லபடியா மாநாட்ட நடத்தி முடிச்சுட்டோம். ஏகப்பட்ட விஷயங்கள் இருந்ததால, மக்களெல்லாம் அங்க இங்கன்னு இருந்ததால அக்டோபர் (நன்றி ஷ்ரேயா) செப்டம்பர் 30 இரவு 8 மணிவாக்குல கூட்டம் நடந்தேறியது. என்ன நடந்ததுன்னு ஏற்கனவே விலாவாரியா துளசி சொல்லிட்டதால விட்டுபோன மிச்சசொச்சம் இப்பதிவு.

எப்படிரா இப்டி இவுங்களால எழுத முடியுதுன்னு உங்கள்ள நிறைய பேருக்கு தோணியிருக்கும். நேர்ல பாத்தப்பதான் புரிஞ்சுது. பேசுறதே அப்படித்தான். split-second ன்னு சொல்வாங்களே அது மாதிரி எத பத்தியும் ஜோக்தான். மிக அபிரிதமான் நகைச்சுவை உணர்வுள்ளதுனாலதான் இவுங்களால இப்டி எழுத முடியுது என்பதை புரிந்துகொண்டேன். மிக ரசனையுடன் சமீபத்தில் கட்டிய (யானைகளும் அதன் முகமுடைய தெய்வமும் நிறைந்த) வீட்டை சுற்றி காட்டினார். உஞ்சல் (நம்ம தமிழ்நாடு ஸ்டைல்ல) போட்ட ஒரே வீடு நியுஸியிலேயே அநேகமாக துளசி வீடாகத்தான் இருக்கும்.

எதோ புராதான புகைபட டப்பாவை (சலங்கை ஓலி மாதிரி) வைத்து அவங்க இருட்டடிப்பு செஞ்சு படம் போட்டாங்க. அதுனால இங்க ‘கப்பு’ துளசியுடன் இருக்கும் தெளிவான படம்.


கப்புவுடன் துளசி

copyright NZ-blog conference 2005