இது நடந்து கிட்டத்தட்ட 9 மாதங்களிருக்கும். சுனாமியால் பாதிக்கப்பட்டது மனிதன் மட்டுமில்லை சில மிருகங்களும்தான். என் நண்பன் சென்னையில் அப்போதுதான் பிறந்த அனாதையாகிப்போன அந்த நாய் குட்டியை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். பின்பு ஒரு மிருக வைத்தியர் அது டாஸ்ஹெண்ட எனப்படும் நல்ல உயர்ந்த ஜாதி நாயென்றும் சொல்லியிருக்கிறார். இப்போது இந்த நாய்க்கு ஒரு நல்ல வீடு தேவை. விலையேதுமின்றி இனாமாகக் கொடுக்க தயாராக இருக்கிறான். இவர் ஏன் இந்த நாயை குடுக்கிறாரென்றால் இவரது மனைவி உடை மாற்றும் போது தன்னை முறைத்துப்பார்க்கிரது என்ற வினோதமான குற்றம் சாட்டுகிரார். இது மிகவும் விசித்திரமான கற்பனைதானென்றாலும் வீட்டிலே இருக்கக்கூடாது என கூறிவிட்டதால்
வேறு வழியின்றி கொடுத்துவிட முடிவுசெய்துள்ளார். மற்றபடி குழந்தைகளுடன் அன்யோன்யமாக விளையாடும். ஆகவே யாருக்காவது வேண்டுமானால் என்னை தொடர்புகொள்ளவும். உங்களுக்கு இதனை நண்பர் தன் சொந்த செலவிலேயே அனுப்பி வைப்பார்.

அட பாருங்கள் மறந்தேவிட்டேன், அந்த நாயின் புகைப்படம் கீழே உள்ளது.

ஒரு புன்னகையாவது வந்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.