You are currently browsing the monthly archive for மே 2005.

மேலும் தோண்டியதில்

மழைக்கூ

பளிச்சிடும் மின்னலில்
பூத்தது ஆயிரம் பூ
என் குடையில்.

முன்னேற்றம்

சோடியம் வேப்பர் இலையில் வழியும்
அரசமரத்துக் கீழ்
எப்போதும் புன்னகையுடன்
பிள்ளையார்.

வாழும் கணக்கு

எட்டடிக்கு மூன்றடி
நிலப்பரப்பின்
மூலையில்
ஒரு ஜான் கயிறு
கொண்டு கட்டப்பட்ட
மாடு மேயும்
பரப்பளவு என்ன?
என்று ஏழாம் வகுப்பில்
போட்ட கணக்கின் விடை
ஐயா! நடு வயதில்
இப்போது
புரரிகிறதய்யா.

Ego

புறத்துக்கு நான்
என்னை காட்டியிருக்கும்
அடையாளம்
அகத்துள் விரியும்
வெறுமை
சிதைத்துவிடுமோ
என்றஞ்சி,
கடந்த காலத்தை
பகைத்துக்கொண்டு,
நிச்சயமில்லா
எதிர் காலத்தில்
காட்டிய அடையாளத்தையே
காப்பற்ற வேண்டி,
நழுவிப் போகும்
நிகழ் காலத்தில்
நித்திய அவதி.

பிகு: திருமா, மருத்துவர் , ஏனையர் பொருத்தருள எல்லாம் வல்ல…

அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த மாதிரி ஆஸ்த்ரேலியா இந்தோனேஷியா மீது படையெடுத்தால் அது ஆச்சர்யபடுவதற்க்கில்லை. அந்த அளவுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 4-1/2 கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக ஷப்பெல் கோர்பி என்ற 27 வயது ஆஸ்த்ரேலிய பெண் கைது செய்யப்பட்டு மே 28ம் தேதி 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதை நேரடியாக TVல் ஒலிபரப்பப்பட்டபோது ஆஸ்த்ரேலியாவே அந்த 5 நிமிடங்களுக்கு ஸ்தம்பித்துப் போய் பார்த்துக்கொண்டிருந்ததாம்.

இது சரியா தவறா என்று சிண்டை பிய்துக்கொண்ட்டு விவாதிக்கிறார்கள். ஒட்டு மொத்த ஆஸ்த்ரேலியர்களும் இந்தோனேஷியாவை புறக்கணிக்க வேண்டுமென்கிறார்கள். இதன் மூலம் இந்தோனேஷியா மீது மேற்கத்தியர்கள் கொண்டுள்ள அபிப்ராயம்:

1. நாணயமற்ற அரசு
2. படிப்பறிவில்லாத மக்கள்
3. ஊழல் நிறைந்த நாடு
4. போலிசும் நீதிமன்றமும் நேர்மையில்லாதது, ஊழல் நிறைந்தது.

ஆகவே மக்களே (மேற்கத்தியர்களுக்கு) இந்த லீவுக்கு பாலி போகலாம்னு இருந்தியா? வேண்டாம். ஆஸ்த்ரியாவோ, லிஸ்பானோ இல்லை பாரீசுக்கோ போங்களேன்னு உபதேசம் செய்கிறார்கள். இப்பத்தான் சுனாமி வந்து ஒரு வழியாக மீண்டு கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாவை நம்பியிருக்கும் ஒரு நாடு. இந்த மாதிரி கண்மூடித்தனமாக ஒரு நாட்டை பகிஷ்கரித்தல் சரியா? அங்குள்ள ஹோட்டல் தொழிலாளியோ, கைவண்டி இழுப்பவனோ, டாக்ஸி ஓட்டுபவனோ இவர்களை என்ன செய்தான்?

இதன் பின்னனி என்ன?போதை பொருள் வைத்திருந்ததால் மரண தண்டனை. இது இந்நாட்டின் மிகதெளிவாக அறிவிக்கப்பட்ட சட்ட விதி. கோர்பிக்கு அளித்த நீதி வாக்குமூலம் கூட நிரபராதி என்று நிரூபிக்கும் வரை (Guilt until proven inocence) என்றுதான் குறிபிடுகிறது. அனால் கோர்பி எப்படி நிரூபிப்பார் அதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

அஸ்த்ரேலியாவிலோ, அமெரிக்காவிலோ 4-1/2 கிலோ போதை பொருளை எடுத்துக்கொண்டு போய் கையும் களவுமாக பிடி பட்டால், “இல்லீங்க ஏதோ எனக்கே தெரியாம நடந்து போச்சுன்னு” சொன்னா அங்க உள்ள ஜட்ஜு “சரிடா கண்ணா இனிமே பாத்து நடந்துக்கோன்னு” அனுப்ச்சுடுவாங்களா?இதனால ஒரு நாடுட்கெதிராக கண்டமேனிக்கும் வசை பாடுவதும், அங்கு உள்ள மக்கள் மொத்தமாக கேவலமானவர்கள் என்றும் சொன்னால் அது சரியாகுமா?

இவுங்களுக்கு (மேற்கத்தியர்) இவுங்க ஊர்ல காக்கா தலைகீழா பறக்கும்னு சொன்னா நியாயம். இதையே பக்கத்து ஊர்க்காரனும் சொன்னான்னா அவிங்கெல்லாம் காட்டுவாசிங்க. இவிங்களும் இவிங்க மேண்மையும்…ஹும்.