You are currently browsing the monthly archive for ஏப்ரல் 2004.

மனதுக்கும் மூளைக்கும் என்ன வித்யாசம்?

தெரியுமா?

BBC மன்றத்தில் இப்படி போகிரது விவாதம்:

மூளை இடம், காலத்துக்கு கட்டுப்பட்டது, ஆனால் மனதுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.

உதாரனமாக கணணியை எடுத்துக்கொள்வோம். CPU, மானிட்டர் இத்தியாதி மூளை என்றால், இதன் ஊடாக இயங்கும் வலை (internet) என்பது மனம். அதனுள் இருக்கும் அறிவும், வெளித்தொடர்பு கொள்ளும் ஆற்றலும் மனதுக்கு ஈடாகக்கொள்ளாம். இடம் நேர கட்டுப்பாடு இல்லை.

இப்படி யோசிக்கும்பொழுது, வலையின் பிரம்மாண்டம் மிகபெரிதாக தோன்றுகிரது.

மனது – சோர்வடையாது இயங்கும் கருவி

ப்ளாஃக் – அதற்கொரு வரப்பிரசாதம்

எல்லைகலே இல்லாது மனதில்தான், எதைவேண்டுமானாலும் செய்யமுடியும்.

ஒன்றிரண்டை மற்றவர்களும் பார்க்க அனுமதிக்கும் ஊடகம் ப்ளாஃக்-ஸ்பாட்.

ஆக “சிந்தனை செய் மனமே” (ஒரு கட்டுபாட்டுக்குள்தான், பின்ன நாமெல்லாம் நாகரீகமடைந்தது வீணாபூடுமே).

சிந்தனை நம்மை மேல் நோக்கிய பயனதுக்கு இட்டு செல்லவேண்டும்.

என்னுடைய இந்த எழுதும் முயற்ச்சி புதியது.

பார்ப்போம் எங்கே, எப்படி, எதுவரை…. செல்லும் என்று.

பிகு: இந்த ஊடகத்தை, மென்பொருளை இன்னும் பலவற்றை சாத்தியமாக்கிய முகம் தெரியா நல்-உள்ளங்களுக்கு என் நன்றிகள்.